தேவையான பொருட்கள்

  • 2 கப் வில்லைகளாக நறுக்கி உறைய வைத்த வாழைப்பழம்
  • 1 பெட்டி உறைந்த ஸ்ட்ராபெரி
  • 2 மேசைக்கரண்டி ஓட்ஸ்
  • 2 பிரேசில் நட்ஸ்
  • சுவைக்கேற்ப ஐஸ் கட்டிகள்
  • சுவைக்கேற்ப சர்க்கரை
  • 1/3 கப் தண்ணீர்

படிகள்

  • படி 1: நேரம் இருந்தால்: ஓட்ஸை மென்மையாக்க 1 மணி நேரம் ஊற வையுங்கள்.

  • படி 2: பிளெண்டரில் உறைந்த வாழைப்பழம், உறைந்த ஸ்ட்ராபெரி, ஓட்ஸ், பிரேசில் நட்ஸ், ஐஸ், சர்க்கரை, தண்ணீரைப் போடுங்கள்.

  • படி 3: மிகவும் கிரீமி போல ஆகும் வரை நன்றாக அடியுங்கள்.

வீகன் டிப்ஸ்

  • 1: எந்த வகை வாழைப்பழத்தையும் பயன்படுத்தலாம் (ரஸ்தாளி, பூவன், நேந்திரம் போன்றவை).

  • 2: ஐஸ் ஸ்மூத்தியை இன்னும் கிரீமியாக்க உதவும்.

  • 3: விருப்பம்: அலங்கரிக்க, கிளாஸின் ஓரங்களில் ஸ்ட்ராபெரி ஜாம் அல்லது வீகன் சாக்லேட்டைத் தடவலாம்.

  • 4: ஓட்ஸில் குளூட்டன் இல்லை; ஆனால் அவை பெரும்பாலும் கோதுமையுடன் பயிரிடப்படுவதால், செலியாக் நோயுள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை.