தேவையான பொருட்கள்
- 1/2 கப் மசித்த பழுத்த வாழைப்பழம்
- 1/4 கப் தேங்காய் எண்ணெய்
- 2 மேசைக்கரண்டி தஹினி (எள் விழுது)
- விருப்பம்: 1 மேசைக்கரண்டி கருப்பட்டிப் பாகு
- 1 கப் குளூட்டன் இல்லாத ஓட்ஸ்
- 1/2 கப் நொறுக்கிய முந்திரி - அல்லது வேறு கொட்டைகள்
- 1 தேக்கரண்டி சமையல் சோடா
- 1 சிட்டிகை உப்பு
படிகள்
படி 1: ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழம், தேங்காய் எண்ணெய், தஹினி, கருப்பட்டிப் பாகைக் கலந்து ஒரே சீரான கிரீம் போல ஆக்குங்கள்.
படி 2: மற்ற பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். சிறிய உருண்டைகளாக உருட்டி, இடைவெளி விட்டு வைத்து, கரண்டியின் பின்புறத்தால் தட்டையாக அழுத்துங்கள்.
படி 3: முன்னரே சூடாக்கிய அவனில் 200 டிகிரியில் 10 முதல் 15 நிமிடம் சுடுங்கள்.
வீகன் டிப்ஸ்
1: சமையலில் முட்டைக்குப் பதிலாக மசித்த வாழைப்பழத்தைப் பயன்படுத்தலாம்.
2: சுட்ட பிறகு குக்கீஸை உறைய வைத்துச் சேமிக்கலாம்.


