தேவையான பொருட்கள்
- 1 கப் துருவிய கேரட்
- 1/2 கப் நறுக்கிய பச்சை ஆப்பிள்
- 1/2 கப் டின் சோளம்
- 1/2 கப் பொடியாக நறுக்கிய செலரி
- 1/2 கப் நறுக்கிய ஆலிவ்
- 1 கப் வேகவைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள்
- 1 கப் பட்டாணி
- 1/2 கப் உலர் திராட்சை
- விருப்பம்: 1 கப் உதிர்த்த பலாக்காய் இறைச்சி
- 1/2 கப் வீகன் மயோனைஸ்
- 1 மேசைக்கரண்டி கடுகு சாஸ் (மஸ்டர்ட்)
- அரை எலுமிச்சையின் சாறு
- 1/2 கப் நறுக்கிய பார்ஸ்லி, வெங்காயத் தாள்
- தேவையான அளவு உப்பு, அரைத்த மிளகு
- விருப்பம்: உருளைக்கிழங்கு சேவு (ஸ்ட்ரா பொட்டேட்டோ)
படிகள்
படி 1: ஒரு பெரிய பாத்திரத்தில் துருவிய கேரட், நறுக்கிய பச்சை ஆப்பிள், டின் சோளம், பொடியாக நறுக்கிய செலரி, நறுக்கிய ஆலிவ், வேகவைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், பட்டாணி, உலர் திராட்சை, பலாக்காய் இறைச்சி (விருப்பம்) ஆகியவற்றைப் போடுங்கள்
படி 2: வீகன் மயோனைஸ், மஸ்டர்ட், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய பார்ஸ்லி, வெங்காயத் தாள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பிடுங்கள்
படி 3: நன்றாகக் கலந்து, பிளாஸ்டிக் உறையால் மூடி, பரிமாறும் முன் குறைந்தது 2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள்
படி 4: ஒரு தட்டில் வைத்து, மேலே உருளைக்கிழங்கு சேவுடன் பரிமாறுங்கள்
வீகன் டிப்ஸ்
1: பலாக்காய் இறைச்சிக்குப் பதிலாக உதிர்த்த சோயா, உதிர்த்த புகை மணம் கொண்ட டோஃபு அல்லது முந்திரியைப் பயன்படுத்தலாம்


